2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2022 ஆம் ஆண்டு தரம் ஆறாம் ஆம் வகுப்புக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் தாங்கள் பெற்ற பள்ளிகளின் அடிப்படையில் தெரிவாகியுள்ள பாடசாலைகளை https://g6application.moe.gov.lk/#/publicuser என்ற இணையதளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.
இதுதொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் ,கொழும்பு றோயல் கல்லூரி (ஆண்கள் தமிழ் மொழி மூலம்), மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 178 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 163 புள்ளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்
- கொழும்பு ரோயல் கல்லூரி – 178
- டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 – 163
- புனித மைக்கல் கல்லூரி, மட்டக்களப்பு – 158
- யாழ். இந்துக் கல்லூரி – 158
- இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 – 156
- காத்தான்குடி மத்திய கல்லூரி – 155
- யாழ். மத்திய கல்லூரி – 155
- மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி – 152
- சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி – 152
- புனித ஜோன் பொஸ்கோ, ஹட்டன் – 150
- கிண்ணியா மத்திய கல்லூரி – 147
பெண்கள் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்
- யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை – 163
- வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு – 162
- ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி – 155
- மட்டக்களப்பு, சிசிலியா பெண்கள் கல்லூரி – 153
- பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி – 149
- கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் – 149
- மாத்தளை ஆமினா மகா வித்தியாலயம் – 149
- திருகோணமலை, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி – 147
கலவன் பாடசாலை – வெட்டுப் புள்ளிகள்
- ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி – 164
- மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் – 158
- சாவகச்சேரி இந்து கல்லூரி – 156
- கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி – 156
- வவுனியா, தமிழ் மத்திய மகா வித்தியாலயம் – 155
- மூதூர், மத்திய கல்லூரி – 154
- மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் – 154
- தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் – 153
- கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி – 153
- ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி – 153
- மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் – 152
- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி – 152
- அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி – 151
- கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை – 151
- அக்குரணை, அஸ்ஹர் மத்திய கல்லூரி – 150
- கம்பளை, ஷாஹிரா கல்லுரி – 149
- ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை – 149
- ஏறாவூர் அலிகர் மத்திய கல்லூரி – 149
- சியம்பலாகஸ்கொட்டுவ, மதீனா தேசிய பாடசாலை – 149
- அக்கரைப்பற்று, ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி – 162