24 மணிநேரத்தில் ரூ.60000 கோடி முதலீடு.. அசத்தும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..! #Adani

இந்தியாவின் முன்னணி வர்த்தக மாநிலங்களாக விளங்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் முதலீடுகளையும், வர்த்தகத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாநிலமும் நிறுவனங்களை ஈர்க்க அதிகப்படியான சலுகையை அறிவித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களில் பெரிய அளவிலான முதலீடுகளைப் பெறாமல் அமைதியாக இருந்த ஆந்திரப் பிரதேச மாநிலம் மாபெரும் முதலீட்டுத் திட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

ஒரு கிலோ மாம்பழம் 3 லட்சம்.. ஒடிசா விவசாயிக்கு ஜாக்பாட்..!

ஆந்திர பிரதேச மாநிலம்

ஆந்திர பிரதேச மாநிலம்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிரீன் எனர்ஜி ஆலைகளை அமைப்பதற்காகச் சுமார் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக ஆந்திர அரசுடன் அதானி குழுமம் இத்திட்டத்தை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் செய்துள்ளது.

டாவோஸ் கூட்டம்

டாவோஸ் கூட்டம்

சுவிஸ் நாட்டின் டாவோஸில் நடைபெறும் உலகப் பொருளாதாரக் கூட்டத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனான முதல் சந்திப்பின் போது இத்திட்டம் குறித்து ஞாயிற்றுக்கிழமை முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ரூ.60,000 கோடி முதலீடு
 

ரூ.60,000 கோடி முதலீடு

இதற்கிடையில் திங்கட்கிழமை மீண்டும் கௌதம் அதானி மற்றும் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வருடன் 60000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டு ஒப்பந்தத்தை முறைப்படுத்துவதற்காகச் சந்தித்தார். 2வது நாள் கூட்டத்தில் தான் ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

13,700 மெகாவாட் மின்சாரம்

13,700 மெகாவாட் மின்சாரம்

இந்த 60000 கோடி ரூபாய் முதலீட்டில் அதானி குரூப் 10000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் சோலார் திட்டத்தையும், 3700 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஹைட்ரோ சோலார் திட்டத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டு வாயிலாக 10000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி ஆகியோர் முன்னிலையில் ஆந்திர அரசின் சிறப்புத் தலைமைச் செயலாளர் (தொழில்துறை) கரிகால் வளவன் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி குழுமத்தைச் சேர்ந்த ஆஷிஷ் ராஜ் வம்சி ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

இந்த முதலீட்டின் மூலம் ஆந்திரப் பிரதேசம் இந்தியாவின் கிரீன் எனர்ஜி ஹாப் ஆக மாறும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நம்புகிறார். ஜெகன் மோகன் ரெட்டி நிர்வாகக் குழுவின் திட்ட விளக்கம் அளித்த 24 மணிநேரத்தில் அதானி குழுமம் 60000 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு உள்ளது எனத் தொழில் துறை அமைச்சர் குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டி

ஜெகன் மோகன் ரெட்டி

கர்னூல் மாவட்டத்தில் ஹைடல், காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் சுமார் 5230 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இலக்குடன் வடிவமைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சேமிப்பு மின் நிலையத்திற்கு (IRESPP) சமீபத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani group decide to invest Rs 60000 crore in Andhra pradesh within 24 hours in davos

Adani group decide to invest Rs 60000 crore in Andhra Pradesh within 24 hours in Davos 24 மணிநேரத்தில் 60000 கோடி முதலீடு.. அசத்தும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி..! #Adani

Story first published: Tuesday, May 24, 2022, 16:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.