சென்னை: கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள படம், விக்ரம். மாஸ்டர் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் 3ம் தேதி திரைக்கு வருகிறது. இது 2 மணி மற்றும் 53 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு அமெரிக்காவில் முதல் காட்சி திரையிடப்படுகிறது.