35 மீட்டர் ஆழம்; மூன்று தளங்கள்; பரந்த பொதுத்தளம்… உருவாகும் திருமயிலை மெட்ரோ நிலையம்!

மூன்று தளங்களுடன் 35 மீட்டர் ஆழத்தில் கட்டப்படும் திருமயிலை மெட்ரோ ரயில் நிலையத்தின் பொறியியல் கட்டுமானம் ஆச்சரியப்பட்ட வைக்கக்கூடியது.

Phase II மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திருமயிலையில் கட்டப்படும் மெட்ரோ நிலையம் மற்ற நிலையங்களைக் காட்டிலும் ஆழமாகவும் பரந்த பொதுத்தளத்தோடும் உருவாகி வருகிறது.

மாதவரம் முதல் சிப்காட் வரையில் செல்லும் மெட்ரோ ரயில்கள் முதல் தளத்திலும் மூன்றாவது தளத்திலும் இயக்கப்பட உள்ளன. இரண்டாவது தளத்தில் லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை செல்லும் ரயில்கள் இரண்டு ட்ராக் பாதைகளில் இயக்கப்பட உள்ளன.

சென்னை மெட்ரோ

“Phase I மற்றும் Phase I விரிவு ஆகிய திட்டங்களில் ட்ராக்குகள் ஒரே தளத்தில் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த Phase II பணியின் போது திருமயிலையில் நிலத்தின் பரப்பு குறுகியதாக இருப்பதன் காரணமாக ஒரே தளத்தில் அமைக்க முடியாத சூழல் உள்ளதால் மூன்று தளங்கள் அமைக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள்.

முதல் தளம் 17 மீட்டர் ஆழத்திலும் இரண்டாவது தளம் 24 மீட்டர் ஆழத்திலும் மூன்றாவது தளம் 35 மீட்டர் ஆழத்திலும் கட்டப்பட உள்ளன. இந்தப் பணிகள் நிறைவடைவதற்கு 6 – 8 மாதங்கள் வரை ஆகலாம். Phase-II திட்டத்தின் மதிப்பீடு ரூ.61,843 கோடி.

“மண் பரிசோதனைக்கு பிறகு திருமயிலையில் பாறைகளும் பாறை மணலுமாக இருப்பதைக் கண்டறிந்தோம். மெட்ரோ கட்டுமானத்துக்காக ஆழம் தோண்டுவது, சுரங்கம் அமைப்பது, வெளிச்சுவர் கட்டுவது போன்றவற்றில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன” என்கின்றனர் அதிகாரிகள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.