Bluetooth Headphones: 100 மணிநேரம் வரை பேட்டரி பேக்கப் – வேறென்ன வேணும்!

இந்திய நிறுவனமான
Damson Technologies
கீழ் வரும் பிராண்டான
ஜஸ்ட் கோர்செகா
புதிய கேட்ஜெட்டுகளை பயனர் சந்தையில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்வாட்ச், ப்ளூடூத் இயர்போன்ஸ் என புதிய தயாரிப்புகளுடன் நிறுவனம் தனது பட்டியலை விரிவுபடுத்துகிறது.

இந்த சமயத்தில் புதிய ப்ளூடூத் நெக்பேண்ட் ஹெட்போனை சிறந்த அம்சங்களுடன்
Just Corseca
அறிமுகம் செய்துள்ளது. 100 மணிநேரம் வரை செயல்படும் பேட்டரி, டைப்-சி ஆதரவு, ஃபாஸ்ட் சார்ஜிங் என இன்னும் பல அம்சங்கள் இந்த ஹெட்போனில் நிறைந்துள்ளது.

Infinix Hot 12 Play: செம லுக்கான மலிவு விலை போனை வெளியிட்ட இன்பினிக்ஸ்!

ஜஸ்ட் கோர்செகா ஸ்டாலியன் வயர்லெஸ் நெக்பேண்ட் விலை (Just Corseca Stallion Wireless Neckband Price)

ஜஸ்ட் கோர்செகா ஸ்டாலியன் நெக்பேண்ட் விலை ரூ.3,499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. justcorseca.in, பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களில் இருந்து இந்த நெக்பேண்டை பயனர்கள் வாங்க முடியும். ஒரு வருட உத்தரவாதத்துடன் பல சலுகைகளையும் நிறுவனம் வழங்குகிறது.


Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

ஜஸ்ட் கோர்செகா ஸ்டாலியன் வயர்லெஸ் நெக்பேண்ட் அம்சங்கள் (Just Corseca Stallion Wireless Neckband specifications)

சிறந்த வடிவமைப்புடன், எளிதாக கழுத்தில் இருக்கும் வகையில் இதன் தயாரிப்பு உள்ளது. இதில் 800mAh லித்தியம் பாலிமர் பேட்டரி வழங்கப்படுகிறது. இது சந்தையில் இருக்கும் பிற பிராண்ட் ஹெட்போன்களுக்கு நேரடி போட்டியாக வந்துள்ளது.

இந்த பெரிய பேட்டரியானது, 400 மணிநேரங்கள் வரை ஸ்டாண்ட்-பை டைமை வழங்குகிறது. அதுமட்டும் இல்லாமல், 100 மணிநேரங்கள் வரை இடைவிடாமல் இசையை ரசிக்க முடியும். கூடுதலாக 70 மணிநேரம் நம்மால் தொடர்ச்சியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.


Google Job Tool: வேலை தேடுபவரா நீங்கள் – உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது கூகுள்!

பொதுவாக இதுபோன்ற நெக்பேண்டுகள் உடற்பயிற்சியின் போது பயன்படுத்தப்படுத்தப் படுவதால், புதிய ஸ்டாலியன் IPX8 தரத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் கிடைக்கும் ஃபாஸ்ட் சார்ஜிங்கை பயன்படுத்தி 10 நிமிடம் சார்ஜ் செய்தால், 10 மணிநேரம் வரை பாடல்கள் கேட்க முடியும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

ப்ளூடூத் 5.0 ஆதரவுடன் வரும் இந்த வயர்லெஸ் நெக்பேண்ட், USB டைப்-சி ஆதரவையும் பெறுகிறது. இது பயணத்தின் போது கூடுதல் சுமைகளை தடுக்க உதவுகிறது. கருப்பு நிறத்தில் இந்த நெக்பேண்ட் வெளியாகியுள்ளது. குறைந்த விலையில் அதிக அம்சங்களுடன் வரும் இந்திய தயாரிப்பை நீங்கள் விரும்புவோர் என்றால், இதை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.