Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!

அமெரிக்காவில் 2016 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அரசியல் ஆலோசனை நிறுவனமாக இருந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகாவுக்கு பேஸ்புக் பயனர்களின் தனியுரிமைத் தகவல்களை பகிர்ந்து உரிமை மீறல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மெட்டா நிறுவனர்
மார்க் சக்கர்பெர்க்
பங்கு இதில் அதிகம் இருப்பதாக் கொலம்பியா நீதிமன்றம் கருதி அவர் மீது தற்போது வழக்குத் தொடர்ந்துள்ளது.

Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்!

அட்டர்னி ஜெனரல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

இதுகுறித்து அட்டர்னி ஜெனரல் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, 8.7 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, மற்றும் மூன்றாம் தரப்பினராக செயல்படும் நிறுவனங்களுக்கு பேஸ்புக் அளித்துள்ளது.


iPhone 13: வெறும் ரூ.38,000 விலையில் லேட்டஸ்ட் ஐபோன்!

இதில் மார்க் சக்கர்பெர்க் பங்கு முக்கியமானது என்று அட்டர்னி ஜெனரல் குறிப்பிட்டுள்ளார். மிக முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் போது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அரசியல் ஆலோசனை வழங்கி வந்தது நினைவுக்கூரத்தக்கது.

Xiaomi: இனி சியோமி போன்களில் லெய்கா கேமராக்கள் – மி பேன்ஸ் குஷி!

மார்க் சக்கர்பெர்க் மீது பழக்கு

வழக்குத் தொடர்ந்துள்ள அட்டர்னி ஜெனரல் கார்ல் ரசின், இது வரலாற்றில் தகித்துக் கொள்ளமுடியாத மிகப்பெரிய நுகர்வோர் தனியுரிமை தகவல்கள் மீது நடத்தப்பட்ட ஊழல் என்று குறிப்பிட்டுள்ளார்.


Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!

இதற்காக ரசின் 2018ஆம் ஆண்டு முதல் போராடி வருகிறார். பல முறை இவர் மார்க் சக்கர்பெர்கை வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று போராடி வந்தார். அது விரைவில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மார்க்கின் ஆதாரங்களை நாங்கள் தொடர்ந்து பின்பற்றி வருவதாக கூறிய அவர், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா சம்பவத்திற்கு நேரடியாக பேஸ்புக் வழிவகுத்துள்ளது என்று கூறினார்.


PM Kisan Yojana: மோடி அரசு டெபாசிட் செய்த ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கில் வந்ததா? எப்படி கண்டுபிடிப்பது!

தொடர்ந்து பேசிய அவர், அதன் பயனர்களின் தனியுரிமை மற்றும் தரவுகளைப் பாதுகாப்பதில் பேஸ்புக் தோல்வியடைந்தற்கு மார்க் சக்கர்பெர்க் முக்கிய காரணம் என்று ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன, என்றார்.

DigiLocker: அரசின் டிஜிலாக்கர் இப்போது வாட்ஸ்அப் செயலியில்!

மார்க் சக்கர்பெர்க் கைதா!

இந்த சூழலில், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடி தொடர்பாக மெட்டா நிறுவனர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்

இதுகுறித்து தீவிரமாக விசாரித்த நாம், இது போலியான செய்தி என்பதை கண்டறிந்துள்ளோம். இவர் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.