ரியல்மி
நிறுவனம் புதிய கேட்ஜெட்டுகளை தொடர்ச்சியாக அறிமுகம் செய்துவருகிறது. சமீபத்தில் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுடன் புதிய டேப்லெட்டுகளை அறிமுகம் செய்தது. மொத்தம் 4 வேரியண்டுகளை நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டுவந்தது.
தற்போது, ரியல்மி புதிய 5ஜி ஆதரவு கொண்ட
Realme Pad X
டேப்லெட்டை அறிமுகம் செய்கிறது. சீனாவில் இந்த டேப்லெட்டின் அறிமுகம் மே 26ஆம் தேதி நடக்கிறது. இதுகுறித்த தகவலை சீனாவில் ஜேடி.காம் வெளியிட்டுள்ளது.
–
Motorola: ஜூலை வெளியாகும் மோட்டோவின் 200MP கேமரா போன்!
மொத்தம் மூன்று நிறங்களில்
ரியல்மி பேட் எக்ஸ்
வெளியாகிறது. ஒப்போ பேட், ஒப்போ பேட் ஏர் போன்ற வடிவமைப்பில் ரியல்மி பேட் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் தடிமன் வெறும் 7.1mm ஆக கணக்கிடப்பட்டுள்ளது.
Google Job Tool: வேலை தேடுபவரா நீங்கள் – உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது கூகுள்!
ரியல்மி பேட் எக்ஸ் அம்சங்கள் (Realme Pad X Specifications)
இந்த டேப்லெட் கணினி 11″ இன்ச் பெரிய QHD 2K டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதன் ரெப்ரெஷ் ரேட் 120Hz ஹெர்ட்ஸ் ஆக இருக்கும். ரியல்மி பேட் எக்ஸ் உடன் ஸ்டைலஸ் வழங்கப்படும்.
–
PM Kisan Yojana: மோடி அரசு டெபாசிட் செய்த ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கில் வந்ததா? எப்படி கண்டுபிடிப்பது!
இது பயனர்களுக்கு பல வேலைகளை எளிதில் மேற்கொள்ள உதவியாக இருக்கும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 5ஜி சிப்செட் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வைஃபை மற்றும் செல்லுலார் என வேரியண்டுகள் பிரித்து வழங்கப்படுகிறது.
–
DigiLocker: அரசின் டிஜிலாக்கர் இப்போது வாட்ஸ்அப் செயலியில்!
ரேம் மெமரியைப் பொருத்தவரை 4GB / 6GB என இரண்டு தேர்வுகள் இருக்கும். 64GB, 128GB என இரண்டு ஸ்டோரேஜ் மெமரி ஆதரவுடன் டேப்லெட்டுகள் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழ்பக்கம் ஸ்பீக்கர் கிரில்ஸ் உடன், டேட்டா மற்றும் சார்ஜிங்கிற்காக USB டைப்-சி ஆதரவு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சிப் கார்ட் டிரே இடதுபக்கம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
–
iPhone 13: வெறும் ரூ.38,000 விலையில் லேட்டஸ்ட் ஐபோன்!
இந்த பெரிய டிஸ்ப்ளே டேப்லெட்டை சக்தியூட்ட 8,360mAh பேட்டரி கொடுக்கப்படும். இதனை ஊக்குவிக்க பாஸ்ட் சார்ஜிங் வழங்கும் நிறுவனம், அதன் வாட் குறித்த எந்த தகவலையும் பிரகடனப்படுத்தவில்லை.
புதிய ரியல்மி டேப்லெட் ஸ்டீரியோ ஆதரவை பெறுமா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் டேப்லெட் சுமார் ரூ.25,000 விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று வெளியான தகவல்கள் மூலம் கணிக்கப்பட்டுள்ளது.