Tamil Nadu News Updates: தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் சுற்றறிக்கை. குரங்கு அம்மை சந்தேகிக்கும் நாடுகளுக்கு கடந்த 21 நாள்களில் பயணம் செய்தவர்களின் தகவல்களை பெறவும். குரங்கு அம்மை அறிகுறிகள் உள்ள நோயாளிகளை உடனடியாக தனிமைப்படுத்தவும் உத்தரவு
இன்று மேட்டூர் அணை திறப்பு
குறுவை சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். ஜூன் 12ம் தேதி திறக்கப்படும் அணை இம்மாதம் முன் கூட்டியே திறக்கப்படுகிறது
எம்.பி. தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் போட்டியிட இன்று முதல் மே 31 வரை தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ102.63க்கும், டீசல் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.
CUET தேர்வு: 11.51 லட்சம் பேர் விண்ணப்பம்
CUET தேர்வுக்கு 11.51 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஜூலை முதல் வாரத்தில் CUET தேர்வு நடைபெறுகிறது.
இந்தி, சமஸ்கிருதம், மராத்தி, ஒடியா, நேபாளி, உருது, மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில் ஜுன் 12-ல் திருக்குறள் வெளியாகிறது என செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குநர் சந்திரசேகர் தகவல்
வெறுப்பு குழுக்களின் போராட்டங்களால், எங்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
கர்நாடகா ஹுப்ளி மாவட்டத்தில் தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐபிஎல் பிளே-ஆப் : கொல்கத்தாவில் இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தான் – குஜராத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றிபெறும் அணி, நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.