Telecom: புதிய சிம் பெற பொதுவாக என்ன செய்ய வேண்டும்? நீங்கள் எந்தக் கடைக்கும் சென்று, அடையாள அட்டையைக் காட்டி சிம் கார்டை வாங்கலாம். சில மணி நேரம் கழித்து, சிம் கார்டும் செயல்படத் தொடங்குகிறது. ஆனால் அது இப்போது நடக்காது.
புதிய சிம் கார்டுகள் தொடர்பான சில விதிமுறைகளை அரசு மாற்றியமைத்ததே இதற்குக் காரணம். சில வாடிக்கையாளர்களுக்கு சிம் கார்டு வாங்குவது முன்பு போல் எளிதாக இருக்காது. இது பலருக்கு பிரச்னையாக இருக்கலாம்.
ஆள்மாறாட்டம் போன்ற மோசடிகளில் இருந்து பாதுகாப்பான தொலைத்தொடர்பு சேவையை வழங்க, இந்த முடிவை ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ளது. இதில் பல நன்மைகளும் அடங்கியுள்ளது. கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
Bill Gates: தல… என்ன போன் வெச்சிருக்கார் தெரியுமா – ஆனா சத்தியமா நீங்க நெனச்சது இல்ல!
வீட்டிற்கே வரும் சிம் கார்டு
உண்மையில், வாடிக்கையாளர்கள் இப்போது ஆன்லைனில் புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். சிம் கார்டை அவர் வீட்டிலேயே இலவச டெலிவரி மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
முக்கியமாக 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, இப்போது டெலிகாம் நிறுவனங்கள் புதிய சிம் கார்டுகளை வழங்காது. இப்படி செய்தால் அது சட்டப்படி குற்றமாகக் கருதப்படும்.
இதையும் படிங்க:
Xiaomi Mi Band: விற்பனையில் புரட்சி செய்த Mi பேண்டின் அடுத்த மாடல் ரிலீஸ்!
இப்போது, உங்களுக்கு புதிய சிம் கார்டு வேண்டும் என்றால், ஆதார் அல்லது டிஜிலாக்கர் அல்லது ஏதேனும் டிஜிட்டல் ஆவணங்களை சமர்பித்து பெற முடியும். மேலும், ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கு புதிய சிம் கார்டு வழங்கப்படாது.
அப்படிப்பட்ட ஒருவர் விதிகளை மீறி பிடிபட்டால், சிம் கார்டுகளை விற்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சிக்கல்கள் எழும். இந்த விஷயத்தில் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுவர்.
Mark Zuckerberg: பேஸ்புக் மார்க் கைது? டெக் துறையில் பரபரப்பு!
நீங்கள் ரூ.1 செலுத்தினால் போதும்
புதிய விதிகளின்படி, UIDAI அடிப்படையிலான E-KYC சேவை மூலம் சான்றிதழுக்காக புதிய மொபைல் இணைப்புக்கு பயனர்கள் ரூ.1 மட்டுமே செலுத்தினால் போதும்.
இதையும் படிங்க:
Realme Narzo 50 5G Launch: முதல் ஸ்லிம் 5ஜி நார்சோ போன் அறிமுகம் – விலை ரொம்ப கம்மி தான்!
DOT கூற்றுப்படி, ஆஃப்-போர்ட்டல் அடிப்படையிலான செயல்முறை மூலம் வாடிக்கையாளர்களுக்கு மொபைல் இணைப்பு வழங்கப்படும். இதில் வாடிக்கையாளர் வீட்டிலிருந்தே இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TRAI: நம்பர் இல்லணாலும் பராவால்ல… இனி அழைப்பவரோட ஆதார் பெயர் போன்ல காட்டும்!
அழைப்பவரின் ஆதார் பெயர்
மேலும் அரசு புதிய மாற்றங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. அதாவது, ட்ரூ காலர் செயலியின் சேவையைப் போன்று, அழைப்பவரின் ஆவணங்களில் இருக்கும் பொயரை, அழைப்பை பெறுபவரின் மொபைலில் காட்ட அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஒன்றிய அரசு டெலிகாம் நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் குழுக்கள் அமைத்து அடுத்தகட்ட பணிகள் குறித்து விவாதித்து வருகிறது.