இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் நீண்டநாள் தலைவர் நரிந்தர் பத்ரா. இவர் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் பதவிக்கு அதிக நேரம் தேவைப்படுவதாகவும், அதனால் தனது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து நரிந்தர் பத்ரா மேலும் கூறியதாவது:-
உலக ஹாக்கி ஒரு இன்றியமையாத வளர்ச்சிக் கட்டத்தில் இருக்கும் நேரத்தில் ஹாக்கியை ஊக்குவிப்பதுடன், இந்த ஆண்டு ஒரு புதிய போட்டியை உருவாக்குதல், சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் ஹாக்கி தேசிய கோப்பை, ரசிகர்களை ஈர்க்கும் தளங்கள், செயல்பாடுகளை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றில் எனது பங்கு சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் தலைவராக அதிக நேரம் தேவைப்படுகிறது.
இதன் விளைவாக, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.
இந்திய விளையாட்டுகளை மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கும், 2036-ம் ஆண்டு இந்தியாவில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும் உழைக்க, புத்துணர்வுடன், புதிய யோசனைகளுடன் வருபவர்களுக்கு பதவியை விட்டுக்கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உணர்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் ஆத்திரம்- அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்திய பயணிகள்