அன்றைய காலத்தில், மண் பாண்டங்கள் இல்லாத இந்திய சமையலறைகளை பார்க்க முடியாது. தண்ணீரை சேமித்து வைப்பது முதல் சமையல் வரை அனைத்தையும் பெண்கள் மண்பானையிலே செய்தனர்.
மண் பானைகளில் சமைக்கப்படும் உணவுகளில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் சல்பர் உள்ளது, இவை மனித உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை உணவில் எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், உங்கள் உணவை சுவையாக மாற்ற தேவையற்ற கொழுப்பைச் சேர்க்க வேண்டியதில்லை.
உணவுக்கு மட்டும் நல்லது என்பதைத் தாண்டி, மண் பானைகள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக கோடை காலத்தில், மண்பானைகளைப் பயன்படுத்துவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. புத்துணர்ச்சி மற்றும் குளிர்ச்சியைத் தவிர, மண்பானையில் அல்லது பாட்டிலில் சேமிக்கப்படும் தண்ணீர் மிகவும் நன்மை பயக்கும் என்று அறியப்படுகிறது.
மண்பானை தண்ணீர் குடிப்பது பலருக்கு புதிதல்ல, இங்கு மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் குடிப்பதன் பல நன்மைகளை, ஆயுர்வேத நிபுணர் நித்திகா கோஹ்லி பகிர்ந்து கொண்டார்.
உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும்
மண்பானை தண்ணீர் குடிப்பது “வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரால், உடலின் இயற்கையான வளர்சிதை மாற்ற அமைப்பு அதிகரிக்கிறது.
தண்ணீரை இயற்கையாக குளிர்ச்சியாக வைத்திருக்கும்
உங்கள் தண்ணீரை ஃபிரிட்ஜில் வைப்பதை மறந்துவிடுங்கள், “சரியான வெப்பநிலைக்கு” அவற்றை மண் பாட்டில்கள் அல்லது பானைகளில் சேமிக்கவும். மண் பானைகளில் இருந்து தண்ணீர் குடிப்பது சன் ஸ்ட்ரோக்கை தடுக்கும்.
நச்சு இரசாயனங்கள் இல்லாதது
மண்பானையில் இருந்து தண்ணீரைக் குடிப்பதன் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்று, “அதில் எந்த நச்சு இரசாயனங்கள் பற்றிய பயமும் இல்லை” என்பதுதான்.
மண்பானைகளில் சேமித்து வைத்த தண்ணீரைக் குடிப்பதால் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“