ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதை எதிர்த்து, சில நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார் ரஷ்ய தூதரக அலுவலர் ஒருவர்.
ஜெனீவாவில் வாழ்ந்து வரும் Boris Bondarev (41) என்னும் அந்த ரஷ்ய தூதரக அலுவலர், உக்ரைன் ஊடுருவல் குறித்து தன்னுடன் பணி புரியும் மூத்த தூதரக அலுவலர்களிடம் பல முறை கவலை தெரிவித்ததாகவும், ஆனால், அவர்களோ, பின் விளைவுகளைத் தவிர்க்கவேண்டுமானால், வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு என்று தன்னை அமைதியாக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Bondarev ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dimitri Peskov, பெரும்பான்மை ரஷ்ய பொதுமக்களின் கருத்துக்கு எதிராக Bondorev முடிவெடுத்துள்ளதாகவும், இனி அவர் தங்கள் பக்கம் இல்லை, என்றும் சொல்லப்போனால் தங்களுக்கு எதிராக ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து Bondorev மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.
சுவிட்சர்லாந்து தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்துள்ளதால் நெகிழ்ச்சியடைந்துள்ள Bondorev, தான் சுவிட்சர்லாந்துக்கு நன்றிக் கடன் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.