உப்பு நிறந்த கடலில் சர்க்கரை குவியல்கள்; ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

உப்பு நிறைந்த கடலில் சர்க்கரை குவியல்கள் உள்ளது என்றால் ஆச்சர்யமாக உள்ளது இல்லையா… ஆம்… சமுத்திரத்தில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை மலையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 32 பில்லியன் கோக் கேன்களுக்கு சமமான சர்க்கரை கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடல் நுண்ணுயிரியலுக்கான மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் (Max Planck Institute for Marine Microbiology) என்னும் கல்வி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கடலுக்குள் சர்க்கரை மலையைக் கண்டுபிடித்துள்ளனர். 

உலகப் பெருங்கடல்களில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரையின் பெரிய மலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடல் புல் மிக வேகமாக அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் குழு கூறும் நிலையில், 32 பில்லியன் கோக் கேன்களுக்குச் சமமான சர்க்கரை கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க |  Viral News: 11 லட்சம் ரூபாய் செலவழித்து நாயாக மாறிய நபர்

உலகப் பெருங்கடல்களில் கடல் புல்வெளிகளுக்கு அடியில் சர்க்கரை குவியல்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஏனென்றால், கடல் புல்கள் கார்பனை உறிஞ்சுவதில்  மிகவும் திறமையானவை.  உலகின் கார்பன் உறிஞ்சி சுற்று சூழலை காக்கும், மிக சிறந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகும்.

ஒரு சதுர கிலோமீட்டர் கடற்பரப்பில் நிலத்தில் உள்ள காடுகளை விட இரு மடங்கு கார்பனும், 35 மடங்கு வேகமாகவும் சேமித்து வைக்கிறது என்று நிபுணர்கள் தங்கள் ஆய்வில் மேலும் தெரிவித்தனர்.

எனவே, இந்தப் புல்வெளிகளைச் சுற்றியுள்ள கடற்பரப்பை ஆய்வு செய்தபோது, அவற்றின் மண் அமைப்புகளில் மிக அதிக அளவில் சர்க்கரை இருப்பது கண்டறியப்பட்டது.

மேக்ஸ் பிளாங்க் இன்ஸ்டிடியூட் கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான மானுவல் லிபேக் கூறுகையில், கடல் சூழலில் கடைசியாக அளவிடப்பட்ட சர்க்கரை அளவை விட 80 மடங்கு அதிகமாக உள்ளது என்றார். சுக்ரோஸ் வடிவில் 0.6 முதல் 1.3 மில்லியன் டன் சர்க்கரை இருப்பதாக மதிப்பிட்டுள்ளோம் என்றும் லிபேக் கூறுகிறார். இந்த சர்க்கரை புதையல் கடல் புல்லின் ரைசோஸ்பியரில் உள்ளது. இது தோராயமாக 32 பில்லியன் கோக் கேன்களுக்குச் சமம்.

மேலும் படிக்க |  Viral News: தாடைகள் இல்லாமல் பிறந்த மனிதனை மணந்த அழகிய பெண்

வேகமாக அழிந்து வரும்  கடல் புல் 

கடல் புல்வெளிகள் மிக வேகமாக அழிந்து வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடல் புல் பூமியில் மிகவும் அழிந்து வரும் தாவரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அனைத்து கடல்களிலும் கல புல்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகின் கடல் புல்லில் மூன்றில் ஒரு பங்கு ஏற்கனவே அழிந்து விட்டதாகவும் கூறுகின்றனர். கடல் புற்களில் காணப்படும் நுண்ணுயிரிகள் கடலின் சூழலியல் மண்டலம் சீராக இயங்க உதவுகின்றன.

காலநிலை மாற்றத்தின் பார்வையில் கடல் புல்லின் விரைவான அழிவு நிகழ்வு ஆபத்தான அறிகுறியாகும். இதனால் கடல் நீர் மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடல் புல்வெளிகள் கார்பனை உறிஞ்சுவதற்கு மிகவும் பயனுள்ள தாவரம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இழை அழிந்தால், கார்பன் அளவு பெருமளவு கூடிவிடும். இது கடல் வாழ் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஆகும் 

மேலும் படிக்க |  OMG… இது தான் சொர்க்க வாசலா… வியக்க வைக்கும் வீடியோ

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.