பெர்ஹாம்பூர்,-ஒடிசாவில் சாலையோரத்தில் பஸ் கவிழ்ந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட ஆறு சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர்.
காயம் அடைந்த 40 பேரில் 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களைச் சேர்ந்த 65 சுற்றுலா பயணியர் உட்பட 77 பேர் ஒடிசா மாநிலத்துக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.ஒடிசாவில் சுற்றுலா முடித்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்துக்கு, நேற்று முன்தினம் இரவு அந்த பஸ் சென்று கொண்டிருந்தது.
நேற்று அதிகாலை, ஒடிசாவின் துர்காபிரசாத் கிராமத்தை கடந்த போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் அதே இடத்திலேயே உயிரிழந்தனர்.காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.அதில், 15 பேர் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Advertisement