அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட் நிலை 25,999 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அன்றைய காலகட்டத்தில் கடைக்கு சென்றது அனைத்து பொருட்களையும் வாங்கி வருவார்கள். ஆனால், தற்போது இணைய தளங்கள் மூலம் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வரவழைத்து வாங்கும் வழக்கம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது
குறிப்பாக அமேசான், ஃப்ளிப்கார்ட் ஆகிய இரண்டு தளங்களில் இருந்து ஏராளமான பொருள்கள் பொதுமக்களால் வாங்கப்படுகிறது. இதன் வளர்ச்சியை பார்த்து மேலும் ஆன்லைன் பொருள் விற்பனை நிறுவனங்கள் வந்துள்ளன. கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இந்த நிலையில் அமேசான் இணையதளத்தில் ஒரு பிளாஸ்டிக் பக்கெட்டில் விலை 25,999 ரூபாய் என்று பதிவு செய்ததை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த பிளாஸ்டிக் பக்கெட் வாங்குவதற்கு ஈஎம்ஐ வசதியும் உள்ளது என்றும் அனைவரும் கிண்டல் செய்து பதிவிட்டு வந்தனர்.
இந்தநிலையில் அமேசான் நிறுவனம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது ரூ.259. 99 என்று பதிவு செய்வதற்கு பதிலாக தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
newstm.in