![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653503890_NTLRG_20220525160621547985.jpg)
கஞ்சா பூ கண்ணாலே பாடல் லிரிக் வீடியோ வெளியீடு
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை சித்ஸ்ரீராமுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜாவும் பாடி இருக்கிறார். கருமாத்தூர் மணிமாறன் என்பவர் எழுதி இருக்கிறார். கஞ்சா பூ கண்ணாலே செப்புச்சிலை உன்னாலே இடுப்பு வேட்டி அவருதடி நீ சிரிச்சா தன்னாலே என்று தொடங்கும் இந்த பாடல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், மனோஜ் பாரதிராஜா, சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.