தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, மே 24-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக ‘அடுத்த 20, 30 ஆண்டுகளுக்கு பாஜகவை மையப்படுத்திதான் அரசியல்… பிரசாந்த் கிஷோர் கணிப்பு எந்த அளவுக்கு உண்மை?’ எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவை கீழே.
இளஞ்செந்தில்
காங்கிரசுக்கு தன்னோட பேரத்தை வலுப்படுத்த கொடுக்கப்படும் நெருக்கடி, இதை தாண்டி ஒன்றும் இல்லை.
M.JUNAYATH DMK IT wing
மோடி அமித்ஷா,எல்லாம் ஓரம் கட்டப்படுவார்கள் அடுத்த கட்டத் தலைவர்கள் முன்னிலை படுத்தப்படுவார்கள்,இவர்கள் அத்வானி போன்று பின்னால் நின்று செயல் படுத்துவார்கள்,பிறகு
பிறகு என்ன அத்வானிக்கு என்ன நிலைமையோ அதே தான்.
Rangaraju Palanisamy
பாஜக தலைமை வகித்தது முதல் மாநில கட்சிகளால் ஊழல் செய்ய முடியவில்லை, டிஜிட்டல் இந்தியா, தடுப்பூசி, மோடியால் மேலை நாடுகளில் இந்தியாவிற்கு பெருமை இன்னும் பல சொல்ல தக்க வகையில் இளைஞர்கள் கவருவதால் பாஜக வளர்கிறது என்பது நிதர்சன உண்மை..
Kaviyanandh K
நிச்சயமாக அது இருக்கலாம் மூன்றாவது அணி என்பது தேவையில்லை காங்கிரஸ் கட்சியும் பிற எதிா்கட்சிகளும் ஒரணியில் ஒன்றாக நிற்காவிட்டால் பாஜகவை யாராலும் வீழ்த்த முடியாமல் தான் போகும் நாட்டின் நலன் கருதி எதிா்கட்சிகள் செயல்பட்டால் நல்லது விழித்து கொள்ளுங்கள்
Marudhu Mahizhini
ஆங்கிலேயனிடம் இருந்து பெறப்பட்ட சுதந்திரம்,
பல வருடங்களை கடந்தும், யாருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்பதின் அச்சாரமாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
venkat
இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ள சிலருக்கு பிரசாந்த்கிஷோர் தேவைப்படுகிறார் என்பதே அவர்கள் எந்த அளவுக்கு அவர்கள் நிஜ உலகத்தில் வாழ்கின்றனர் என்பதைக்காட்டுகிறது
Dhrish
காங்கிரசில் ஒரு முக்கிய பதவி கிடைக்காத விரக்தியில் பிரசாந்த் கிஷோர் இப்படி பேசுகிறார்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM