வாஷிங்டன்,
ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் குரங்கு காய்ச்சல் பரவி வருகிறது. உலகளவில் இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தேவைப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் ஆப்பிரிக்காவுக்கு வெளியே இந்த குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி தேவைப்படும் என்று நம்பவில்லை என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
இந்த அமைப்பின் அதிகபட்ச ஆபத்தான நோய்க்கிருமி குழுவின் தலைவர் ரிச்சர்டு பிபோடி மேலும் கூறுகையில், “தடுப்பூசி மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் வினியோகம் ஒப்பீட்டளவில் குறைந்த அளவில்தான் உள்ளது” என தெரிவித்தார்.
இந்த வைரஸ் பரவலை நல்ல சுகாதாரம் கட்டுப்படுத்தும் எனவும் உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
ஜெர்மனி அரசு, இந்த நோய்க்கான தடுப்பூசி வாய்ப்புகள் குறித்து ஆராய்வதாக தெரிவித்துள்ளது.