அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து உணர்ச்சிபூர்வமாக பேசியுள்ளார் தமிழ்வம்சாவளி பெண்ணான நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஒரு தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பேசிய நாட்டின் துணை ஜனாதிபதி கமலா ஹாரீஸ், நடந்தது எல்லாம் போதும். இதயம் நொறுங்கிவிட்டது.
துணிந்து நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
இது போன்ற ஒரு நிகழ்வு இனி நடக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான பொதுக் கொள்கை வேண்டும் என கூறியுள்ளார்.