குவாட் உச்சிமாநாட்டின் போது…ஜப்பான் வான்பரப்பில் கூட்டாக பறந்த சீன, ரஷ்ய போர் விமானங்கள்!


இந்தோ-பசிபிக் நாடுகளின் தலைவர்கள் குவாட் உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போது ரஷ்யா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் ஜப்பான் வான்பரப்பில் பறந்து இருப்பது தீவிரமான கவலையை ஏற்படுத்தி இருப்பதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தோ- பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான குவாட் உச்சிமாநாடு ஜப்பான் தலைநகர் டொக்கியோவில் கடந்த செய்வாய்க் கிழமை நடைப்பெற்றது.

இதில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

அதன் போது ஜப்பானின் வான்பரப்பிற்குள் சீனா மற்றும் ரஷ்ய போர் விமானங்கள் இணைந்து பறந்ததாக ஜப்பான பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜப்பான் அரசு அதிகாரி நோபுவோ கிஷி ( Nobuo Kishi) தெரிவித்த தகவலில், உலக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருக்கும் போது ரஷ்யா மற்றும் சீனாவின் போர் விமானங்கள் ஜப்பான் வான் பரப்பிற்குள் அத்துமீறி பறந்து இருப்பது தீவிரமான கவலையை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் உச்சிமாநாடு நடைப்பெற்று கொண்டு இருக்கும் போது ஆத்திரமூட்டும் விதமாக ரஷ்ய உளவுத்துறை போர் விமானம் கடந்த செவ்வாய் கிழமை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ பகுதியில் இருந்து மத்திய ஜப்பானில் உள்ள நோட்டோ தீபகற்பத்திற்கு பறந்தாக தெரிவித்துள்ளார்.

குவாட் உச்சிமாநாட்டின் போது...ஜப்பான் வான்பரப்பில் கூட்டாக பறந்த சீன, ரஷ்ய போர் விமானங்கள்!

இந்தநிலையில் இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், சீனாவின் H-6K மற்றும் ரஷ்யாவின் Tu-95MS விமானங்கள் இணைந்து வழக்கமான கூட்டு ரோந்து பயிற்சியை கிழக்கு சீன கடல், மேற்கு பசிபிக் மற்றும் ஜப்பான் கடற்பரப்பு மேலே நடத்தியதாக தெரிவித்துள்ளது, மேலும் இந்த போர் விமானங்கள் சர்வதேச விதிகளுக்கு கட்டுப்பட்டு பறந்ததுடன் எந்த நாட்டின் வான்பரப்பு அத்துமீறி நுழையவில்லை என தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: டெக்சாஸ் துப்பாக்கி சூட்டின் 30 நிமிடங்களுக்கு முன்பு…குற்றவாளி பதிவிட்ட திடுக்கிடும் முகநூல் பதிவு!

உச்சிமாநாட்டின் போது நிகழ்ந்த இந்த நடவடிக்கையை கண்டித்த குவாட் உறுப்பு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யாவின் பெயரை நேரடியாக குறிப்பிடவில்லை 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.