கேஜிஎப் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
கடந்த மாதம் 14ம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ஹீரோ யஷ் புகைப்பிடித்தலை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்பிடித்தல் ஆரோக்கியமான சமூக பழக்கம் என்றும், புகைப்பிடித்தல் ஒரு ஸ்டைல் என்பது போலவும், நடித்துள்ளார். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்று கர்நாட மாநில உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி மனுவை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்தது.