சுகர் கிர்ருனு ஏறுதா… உங்க லஞ்ச் ஆப்ஷன் இப்படி இருக்கட்டும்!

உணவுப் பிரியராக இருப்பவர்கள் நீரிழிவு நோயுடன் போராடுவது கடினமாக இருக்கும். ஆனால், எளிமையாக வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு மற்றும் சரியான உணவு மூலம் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்வது எளிது. அதற்கு உங்கள் லஞ்ச் ஆப்ஷன் இப்படி இருக்கட்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கசப்பான விஷயம் சர்க்கரைதான். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயர்வது என்பது சர்க்கரை உணவில் சேர்த்துக்கொள்வதால் மட்டுமல்ல, நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளும் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஏதாவது சாப்பிட்டால் சர்க்கரை கிர்ருனு ஏறுது என்று எதை சாப்பிட்டாலும் கவலையுடனே சாப்பிடுவார்கள். நீரிழிவு நோயாளிகள் எந்த மாதிரியான உணவு சாப்பிடுவது என்று தங்கள் உணவு பட்டியலை சரிபார்த்துக்கொண்டே இருப்பார்கள். எங்கே சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமோ என்று பயப்படுவார்கள்.

அதனால்தான், நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடும் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருந்தால், தினசரி மதிய உணவிற்கு என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுப்பதில் முடிவெடுக்க முடியாமல் இருந்தால், நீரிழிவு நோயாளிகளுக்கான சில மதிய உணவுகளை இங்கே தருகிறோம்.

ரொட்டி வகை

நீரிழிவு நோயாளிகள் அரிசி சாதத்தைவிட ரொட்டியை உணவாகத் தேர்ந்தெடுப்பது நல்லது. ஏனெனில், அரிசி ரொட்டியைவிட இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். உங்களால் அரிசி இல்லாமல் உணவை தேர்வு செய்ய முடியாது என்றால், பகுதி பகுதியாகக் கட்டுப்படுத்தி, உங்கள் அரிசி சாதம் சாப்பிடும் அளவை மெதுவாகக் கட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் அரிசியுடன் சோளத்தை மாற்றலாம். இது உண்மையில் நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பானது.

சில நீரிழிவு பிரச்னைகள் – சப்பாத்திகளில் அடங்கும்- ஜோவர் ரொட்டி, ஓட்ஸ் ரொட்டி, ராகி ரொட்டி, பஜ்ரா ரொட்டி, மூங் தால் ரொட்டி மற்றும் பச்சை பட்டாணி ரொட்டி ஆகியவற்றை சாப்ப்பிடலாம்.

பருப்பு வகை

நீரிழிவு நோயாளிகள் தங்களின் தினசரி புரதத் தேவைக்கு பருப்பு வகைகளை எளிதாக நம்பி இருக்கலாம். புரோட்டீன் அன்றாட உணவில் அவசியமான ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து என்றாலும், உங்கள் புரத சத்துள்ள் உணவை சாப்பிடுவதில் நீரிழிவு நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதிகப்படியான புரதம் சிறுநீரகங்களுக்கு அதிக வேலை அளிக்கும்.

மதிய உணவாக சாப்பிடக்கூடிய சில நீரிழ்வு நோயாளிகளுக்கு ஏற்ற பருப்பு வகையாக – கொண்டைக் கடலை, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, துவரம்பருப்பு, பாலக் தால், ராஜ்மா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

சப்ஜி வகை

சர்க்கரை நோயாளிகள் உருளைக்கிழங்கு, இனிப்பு உருளைக்கிழங்கு மற்றும் கிழங்கு ஆகியவற்றைத் தவிர அனைத்து வகையான காய்கறிகளையும் சாப்பிடலாம், ஏனென்றால், அவற்றில் அதிக மாவுச்சத்து உள்ளது. சர்க்கரை நோயாளிகளின் அன்றாட உணவில், குறைந்த கிளைசெமிக் கொண்ட காய்கறிகளாக பிண்டி, பாகற்காய், துவரம்பருப்பு, பிரிஞ்சி, பாலக், பீன்ஸ், ப்ரோக்கோலி, மேத்தி, காளான், குடைமிளகாய், பட்டாணி, கேரட், கீரை, காலிஃபிளவர், சுரைக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் வெங்காயம் – தக்காளி – வெள்ளரிக்காய் சாலட், முட்டைக்கோஸ் – கேரட் சாலட், வெள்ளரிக்காய் சாலட், கீரை சாலட் அல்லது உங்கள் விருப்பப்படி வேறு எந்த சாலட்டையும் சாப்பிடலாம். ஆனால், அளவாக சாப்பிட வேண்டும்.

முளைகட்டிய தானியங்கள்

முளைகட்டிய தானியங்கள் குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இது அனைத்து நீரிழிவு நோயாளிகள் மற்றும் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் சேர்க்க வேண்டியவை. தானியங்களை முளைக்கட்டுவதால், பருப்பில் உள்ள மாவுச்சத்தை குறைக்கிறது. முளைக்கட்டிய நார்ச்சத்து இரத்தத்தில் சர்க்கரை அளவை மேலும் குறைக்கிறது.

நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், எலுமிச்சை சாறு, சாட் மசாலா மற்றும் உப்பு ஆகியவற்றுடன் ஒரு கிண்ணத்தில் முளைக்கட்டிய தானியத்தை பச்சையாக எடுத்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.