![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653444116_NTLRG_20220524180141168382.jpg)
சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய்
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷாம், யோகிபாபு ஆகியோர் இப்படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து நடிகர் விஜய் சென்னைக்கு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.