சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டராக விஜயராணி பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை மாவட்ட கலெக்டராக எஸ்.அமிர்த ஜோதியை நியமனம் செய்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
அமிர்த ஜோதி தற்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இணைச்செயலாளராக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்கள்…எம்.பி. பதவி: ப.சிதம்பரத்துக்கு சோனியா ஆதரவு- கே.எஸ்.அழகிரி அதிர்ச்சி