டிராக்டரில் உழுது கொண்டிருந்த விவசாயின் மீது மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்துள்ளார்.
வாணியம்பாடி அருகே கலந்திரா கிராமத்தை சேர்ந்த சௌந்தர் என்ற விவசாயி டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்பொழுது அருகில் இருந்த மின் கம்பம் ஒன்று டிராக்டர் மீது சாய்ந்து உள்ளது.
மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் பாய்ந்து, சௌந்தர் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உயிருக்கு போராடிய சௌந்தரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பலவீனமாக இருந்த மின் கம்பம் குறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.