டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 10 வயது சிறுமி 911-க்கு அழைக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியான 19 குழந்தைகளில் 10 வயதான அமெரி ஜோ கார்சாவும் (Amerie Jo Garza) கொல்லப்பட்டார்.
ஆனால், அவர் சாதாரணமாக இறக்கவில்லை. தனது நெருங்கிய தோழி சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த பிறகு, எந்த பயமும் இல்லாமல் தனது செல்போனை எடுத்து அவசர உதவி எண்ணான 911-க்கு அளித்துள்ளார். இந்த தகவலை அவரது சிறுமி அமெரியின் பாட்டி Berlinda Irene Arreola கூறினார்.
தமிழகத்தில் வெடிபொருள் கடத்தல் வழக்கில் இலங்கைத் தமிழர்களுக்கு சிறை தண்டனை விதிப்பு
சிறுமி அவசர உதவியுடன் தொடர்ப்பில் இருக்கும்போது, 18 வயதான துப்பாக்கிதாரி உள்ளே சென்று குழந்தைகளிடம், “நீங்கள் இறக்கப் போகிறீர்கள்” என்று கூறியுள்ளார்.
அப்போது Amerie காதில் தொலைபேசியை வைத்திருந்ததைப் பார்த்த அவன், அதைப் பிடுங்கி உடைப்பதற்குப் பதிலாக, கொலைவெறியில் இருந்த அவன் அமெரியை துப்பாக்கியால் சுட்டான் என்று சிறுமியின் பாட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில், சிறுமி அமெரி ஜோ கார்சா ஒரு ஹீரோவாக பார்க்கப்படுகிறார்.