டெக்சாஸ் துப்பாக்கி சூட்டின் 30 நிமிடங்களுக்கு முன்பு…குற்றவாளி பதிவிட்ட திடுக்கிடும் முகநூல் பதிவு!


”நான் எனது பாட்டியை கொலை செய்ய போகிறேன், அதனை தொடர்ந்து பள்ளியில் நுழைந்து தாக்குதல் நடத்த போகிறேன்” என சால்வடார் ராமோஸ் முகநூல் பக்கத்தில் அடுத்து அடுத்து பதிவினை பதிவிட்டு பிறகு இந்த கொடூர தாக்குதலில் இறங்கி இருப்பது உவால்டே பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் எலிமெண்டரி பள்ளியில் 18 வயது இளைஞன் சால்வடார் ராமோஸ் என்பவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 மாணவ, மாணவிகள் 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் பொலிஸார் நடத்திய மீட்பு தாக்குதலின் போது சால்வடார் ராமோஸ்(18) சுடப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இவற்றில் கூடுதலாக அதிர்ச்சியூட்டும் செய்தி என்வென்றால், எலிமெண்டரி பள்ளியில் சால்வடார் ராமோஸ் தாக்குதல் நடத்துவதற்கு முன், அவரது சொந்த பாட்டியை தலையில் சுட்டு கொன்றுவிட்டு இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தகவல் தெரிவித்து இருப்பது தான்.

இந்தநிலையில்துப்பாக்கிசூடு நிகழ்வு குறித்து தகவல் தெரிவிப்பதற்காக செய்தியாளர்களை சந்தித்த டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், இந்த தாக்குதல் சம்பவம் குறித்து 30 நிமிடங்களுக்கு முன்னதாக பதிவிடப்பட்ட ஒருசில முகநூல் பதிவுகளை தவிர வேறு எந்த முன்னெச்சரிக்கை தகவல்களும் சால்வடார் ராமோஸ் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.

டெக்சாஸ் துப்பாக்கி சூட்டின் 30 நிமிடங்களுக்கு முன்பு...குற்றவாளி பதிவிட்ட திடுக்கிடும் முகநூல் பதிவு!

தாக்குதல் சம்பவத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக சால்வடார் ராமோஸ் பதிவிட்ட 3 முகநூல் பதிவுகளில், முதல் பதிவில் ”எனது பாட்டியை சுட்டு கொல்லப் போகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து சிறிது நேர இடைவெளிக்கு பிறகு சால்வடார் ராமோஸ் பதிவிட்ட இரண்டாவது பதிவில் ”நான் எனது பாட்டியை சுட்டுவிட்டேன்” என தெரிவித்துள்ளார்.

முன்றாவது பதிவில் தான் ”நான் எலிமெண்டரி பள்ளி தாக்குதல் நடத்த போகிறேன்” என தெரிவித்துள்ளார். இந்த முகநூலில் பதிவிட்ட 15 நிமிடங்களுக்கு பிறகு தான் சால்வடார் ராமோஸ் ராப் எலிமெண்டரி பள்ளியில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தி 19 மாணவ, மாணவிகள் 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேரை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

டெக்சாஸ் துப்பாக்கி சூட்டின் 30 நிமிடங்களுக்கு முன்பு...குற்றவாளி பதிவிட்ட திடுக்கிடும் முகநூல் பதிவு!

கூடுதல் செய்திகளுக்கு: சதம் விளாசி லக்னோ அணியை அலறவிட்ட ரஜத் படிதர்: பெங்களூரு அணி அதிரடி வெற்றி

மேலும் தொடர்ந்து பேசிய டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், இந்த துப்பாக்கிசூடு சம்பவம் உவால்டே பகுதியில் வசிக்கும் மக்களை அடி ஆழம் வரை உலுக்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.    



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.