இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை, எளிய குழந்தைகள் சேர்க்கப்படுவர்.
இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மத்திய, மாநில அரசுகளே கட்டணம் செலுத்தும். இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.1 லட்சம் இடங்கள் உள்ளன.
இந்நிலையில், நடப்பு ஆண்டு இலவச கல்வி மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்கியது. இந்த சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் 18ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அண்மையில் மே 25ஆம் தேதி வரை (இன்று) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இதன்படி மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் விருப்பம்உள்ள பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக இன்று மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
newstm.in