புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைல மர காடுகளில் ஏற்படும் தீ விபத்தால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, கரம்பக்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள தைல மரக் காடுகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் இந்த தீ விபத்து சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில மர்ம நபர்கள் வேண்டுமென்றே தைல மரக் காடுகளில் தீவைத்து செல்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அங்குள்ள மின்கம்பிகள் மூலமாகவும் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அடிக்கடி ஏற்படும் இந்த தீ விபத்து காரணமாக அந்த பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதற்க்கு நிறைந்த தீர்வு காண வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.