மு.சி.பூர்ணலிங்கம் :
தமிழ் நூல்களை மொழிப்பெயர்த்து வெளிநாட்டினருக்கும் மொழியின் அருமையை உணர்த்திய தமிழ் அறிஞர் மு.சி.பூர்ணலிங்கம் 1866ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள முந்நீர்ப்பள்ளம் என்ற ஊரில் பிறந்தார்.
இவர் தமிழில் 18 நூல்களும், ஆங்கிலத்தில் 32 நூல்களும் மற்றும் சட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மேலும் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குழந்தை இலக்கியம், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் மொழிப்பெயர்ப்புகளையும் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியா என்ற ஆங்கில நூலில் தமிழ் மொழியின் சிறப்பை வரலாற்று ஆதாரங்களோடு கூறியுள்ளார். சமயச் சான்றோர் வரலாறு மற்றும் அவர்களது தத்துவங்களை பத்துத் தமிழ் முனிவர்கள் என்ற நூலில் விளக்கியுள்ளார்.
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய மு.சி.பூர்ணலிங்கம் பிள்ளை 1947ஆம் ஆண்டு மறைந்தார்.