தவறுகளுக்கு முழு பொறுப்பேற்கிறேன்…பகிரங்க மன்னிப்பு கோரிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!


பார்ட்டிகேட் தொடர்பான Sue Gray-வின் அறிக்கைகள் இன்று வெளியாகிய நிலையில், பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பகிரங்க மன்னிப்பை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய சிவில் அதிகாரி Sue Gray நடத்திய விசாரணையின் முழுஅறிக்கை இன்று வெளியாகி, கொரோனா விதிமுறைகளை பிரதமர் போரிஸ் ஜான்சன் மீறியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், பார்ட்டிகேட் தொடர்பாக தனது பகிரங்க மன்னிப்பை தெரிவித்து கொள்வதாகவும், இந்த தவறுதலான நடவடிக்கைக்கு பிறகு தங்களது பாடங்களை கற்றுக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த 2020 ஆண்டு நடைப்பெற்ற நிகழ்வின் அடிப்படையில் விதிக்கப்பட்ட அபராதங்களின் போதே தான் தனிப்பட்ட முறையில் தாழ்த்தப்பட்டதாகவும், தற்போது தனது வேலையை செய்து வருவதாகவும், இனி அனைவரும் இதில் இருந்து விலகி சென்று அவர்களது பொறுப்பில் கவனம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தவறுகளுக்கு முழு பொறுப்பேற்கிறேன்...பகிரங்க மன்னிப்பு கோரிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!

மேலும் இதுபோன்ற செயல்பாடுகள் பிரதமரின் வேலை நிகழ்வுகள் என்றும், அவற்றில் கலந்து கொள்வது பிரதமரின் வேலை நிகழ்வுகளில் ஒன்று என்றும் அறிக்கை ஆதரிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானிய பிரதமர் பதவி விலக வேண்டும்: கருத்துக்கணிப்பு முடிவுகளால் பரபரப்பு!

தவறுகளுக்கு முழு பொறுப்பேற்கிறேன்...பகிரங்க மன்னிப்பு கோரிய பிரதமர் போரிஸ் ஜான்சன்!

தொடர்ந்து பேசிய பிரதமர், உக்ரைன் போர் மற்றும் பிரித்தானியாவின் வாழ்க்கை செலவு பிரச்சனை ஆகியவற்றில் கவனம் செலுத்த போவதாகவும், எனது தலைமையில் நடைப்பெற்ற அனைத்து தவறுகளுக்கும் தான் முழு பொறுப்பேற்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.