![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653500954_NTLRG_20220525184915323549.jpg)
தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ருதிராஜ்
வெள்ளித்திரையில் 90-களின் தொடக்கத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதிராஜ். முதல் படத்திலேயே நடிகர் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன் படத்தில் நடித்திருந்த அவர், தென்னிந்திய சினிமாக்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் அவரது நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தென்றல், அழகு மற்றும் ஆபிஸ் சீரியல்களின் மூலம் சீரியல் ரசிகர்கள் மத்தியிலும் அதிக பிரபலத்தை பெற்றுள்ளார். தற்போது தாலாட்டு தொடரிலும் ஸ்ருதிராஜ் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட 42 வயதை கடந்துள்ள ஸ்ருதிராஜ் இன்றைய சீரியல் உலகில் பல இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் மார்க்கெட்டில் பீல்ட் அவுட் ஆகாமல் கலக்கி வருகிறார். இன்ஸ்டாவில் வெளியாகியுள்ள அவரது சமீபத்திய புகைப்படங்களிலும் பட்டுப்புடவையில் தேவதை போல் ஜொலிக்கிறார். அவற்றை பார்த்துவிட்டு ரசிகர்கள் 'மேடம் உங்க உண்மையான வயசு தான் என்ன? உங்களுக்கு வயசு ஏறவே ஏறாதா?' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.