தொடக்கப் பள்ளியில் 18 குழந்தைகள் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் கொடூரம் !

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் பலியாகி உள்ளனர். 

சான் அன்டோனியோவிற்கு மேற்கே 85 மைல் தொலைவில் உள்ள உவால்டேயில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் திடீரென பயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் முதலில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரை கொடூரமாக கொல்லப்பட்டனர். ஆனால், படுகாயமடைந்த மேலும் நான்கு மாணவர்கள், மூன்று பணியாளர்கள் உயிரிழந்தனர். 

usa schoolஇதனால்  துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட நான்கு பேர் என மொத்தம் இதுவரை 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் 18 வயதுடைய நபர் என்றும், அவன் அதிகாரிகள் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த குழந்தைகள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

usa school

துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைத் தவிர எத்தனை பேர் காயமடைந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

usa school

 பள்ளி முன்பு மாணவர்களின் பெற்றோர்கள குவிந்து கண்ணீருடன் காத்திருக்கும் நிகழ்வுபெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் சந்தைகளில் கூட துப்பாக்கிகள் கிடைப்பதால் அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதால் இதற்கு தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.