டேராடூன் : உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற அஜய் கொத்தியால், பா.ஜ.,வில் இணைந்தார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது.
முதல்வர் வேட்பாளராக அஜய் கொத்தியால் களம் இறங்கினார்.இந்த தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது. பா.ஜ., ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய அஜய் கொத்தியால், முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மாநில பா.ஜ., மாநில தலைவர் மதன் கவுசிக் ஆகியோர் முன்னிலையில் நேற்று பா.ஜ.,வில் இணைந்தார்.
டேராடூன் : உத்தரகண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டு தோற்ற அஜய் கொத்தியால், பா.ஜ.,வில் இணைந்தார்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.