சென்னை: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதையொட்டி டிரோன், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக போலீஸ் அறிவித்துள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் 22,000 போலீசாருடன் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.