போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துக் கொண்டு பேசிய ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தம் தொடர்பாக பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் ஏற்படாததால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று கூறினார்.
மேலும், ரஷ்ய அதிபர் புதின் உண்மையை புரிந்துக் கொண்டால் போரை தவிர்ப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறிய ஜெலென்ஸ்கி, ரஷ்ய படைகளிடம் இருந்து அனைத்து பகுதிகளையும் மீட்கும் வரை உக்ரைன் தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.