அமெரிக்காவில் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரியின் பள்ளி பருவ வாழ்க்கை குறித்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யுவால்டே பகுதியில் அமைந்துள்ள ராப் தொடக்கப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 19 மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 23 பேர் உயிரிழந்தனர்.
சால்வடார் ராமோஸ் (18) என்ற இளைஞன் இந்த சம்பவத்தை நடத்திய நிலையில் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
சால்வடார் பிரபலமான Wendy உணவகத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
சால்வடார் தனிமையில் இருக்கவே அதிகம் விரும்புவார் என தெரியவந்துள்ளது.
அவரின் குடும்பத்துக்கு தெரிந்த நபர்கள் கூறுகையில், சால்வடார் இறுக்கமாக இருப்பார் மற்றும் அவருக்கு அதிகம் கோபம் வரும்.
ஆனால் அவர் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டுள்ளதை நினைத்தால் வியப்பாக உள்ளது.
சிறுவயதில் பேச்சு குறைபாடு காரணமாக பள்ளியில் நண்பர்களால் அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
அவர் பலவீனத்தை வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.
வீட்டிலும் அவருக்கு பிரச்சனை இருந்திருக்கிறது.
ஏனெனில் போதை பழக்கத்துக்கு அடிமையான தாயாருடன் அவருக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
தொடர் துன்புறுத்தலால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியிருக்கிறார் என கூறியுள்ளனர்.