பிரித்தானியாவில் ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த அச்சுறுத்தல் தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் நிதித்துறை அமைச்சர் ரிஷி சுனக்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பிரித்தானிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
ரயில்வே ஊழியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையைத் தவிர்க்க பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு அழுத்தம் கொடுத்த நிலையில், அதற்கு ரிஷி சுனக் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த புதிய ஒப்பந்தம் மூலம் ஒரு பெரிய ஊதிய உயர்வுக்கான இரயில் தொழிற்சங்க கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதால் இதனை ரிஷி சுனக் மறுத்துள்ளார்.
புடினை 2 மாதங்களுக்கு முன்பே கொலை செய்ய முயற்சி நடந்தது! உக்ரைனிய அதிகாரி பரபரப்பு தகவல்
இந்த கருத்து வேறுபாடு டவுனிங் ஸ்ட்ரீட்டின் எண்.10 மற்றும் எண்.11 அலுவலகங்களுக்கு இடையில் ஒரு புதிய பிரச்சினை தூண்டியுள்ளது.
மேலும், ஊழியர்கள் கோரிக்கைகளை எதிர்க்க முயற்சிப்பதாக கருவூலத்தை இரயில் துறை குற்றம் சாட்டியுள்ளது.
பிரித்தானியாவின் இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT), புதிய ஊதிய ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுத்தும், ரயில்வேக்கு மிகவும் தேவையான சீர்திருத்தங்களை எதிர்த்தும், இந்த கோடையில் ரயில் சேவைகளை நிறுத்துவதற்கு வாக்கெடுப்பின்மூலம் முடிவு செய்துள்ளது.
உக்ரேன் மரியுபோல் நகரத்தில் அழுகிய நிலையில் 200 உடல்கள் கண்டெடுப்பு!
ரிஷி சுன்னத் இதற்கு எதிர்ப்புத்தெரிவித்தாலும், தொழில்துறை உறவுகளின் முட்டுக்கட்டையை உடைக்க பல்லாயிரக்கணக்கான இரயில் தொழிலாளர்களுக்கு சுமார் 5% ஊதிய உயர்வை வழங்குவதற்கான இரயில் தொழில் திட்டங்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் போக்குவரத்துக்கான மாநில செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ஆதரவளிப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது.