மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவை சேர்ந்த யாசகர் ஒருவர் தனது மனைவிக்கு முதுகுவலியால் அவதிப்பட்டு வந்ததால் அவருக்கு ₹90,000 மதிப்புள்ள மொபட் வாங்கி பரிசளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவை சேர்ந்த பிச்சைக்காரர் சந்தோஷ் குமார் சாஹு. இவர் நடக்கும் சவால் கொண்ட மாற்றுத் திறனாளி. அவர் வைத்திருந்த மூன்று சக்கரவண்டியில் அவரைத் தள்ள அவரது மனைவி முன்னியை நம்பியிருந்தார். மோசமான சாலைகள் மற்றும் தீவிர வானிலை காரணமாக முச்சக்கரவண்டியை தள்ளும் போது மனைவி முன்னி சிரமங்களை எதிர்கொண்டார்.
முன்னிக்கு அடிக்கடி முதுகுவலி இருப்பதாக புகார் கூறியதை அடுத்து, சந்தோஷ் குமார் சாஹு தன் மனைவிக்கு ஒரு பைக் வாங்க பணம் சேகரிக்க ஆரம்பித்தான். கடந்த நான்கு ஆண்டுகளாக யாசகம் பெற்று ரூ. 90,000 வசூலித்து, மொபட் ஒன்றை வாங்கி மனைவி டில் முன்னியை ஆச்சரியப்படுத்தினார் சந்தோஷ் குமார்.
A beggar from Chhindwara in Madhya Pradesh bought a moped worth Rs 90,000 for his wife after she complained of backache @ndtv@ndtvindia pic.twitter.com/9srzxKrFCx
— Anurag Dwary (@Anurag_Dwary) May 25, 2022
மாலை அணிந்த மொபட்டில் தம்பதிகள் சவாரி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிந்த்வாராவில் உள்ள பேருந்து நிலையங்கள், கோயில்கள் மற்றும் மசூதிகளில் பிச்சை எடுத்து ஒரு நாளில் சுமார் ₹ 300 முதல் ₹ 400 வரை சம்பாதிக்கும் இந்த ஜோடி, இப்போது சியோனி, போபால் மற்றும் இந்தூருக்கு தங்களின் புதிய மொபட்டில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM