மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைத்தன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்தது என்பதை பார்த்தோம். குறிப்பாக சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாயும் டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் குறைந்ததால் பொதுமக்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.
அதுமட்டுமின்றி பாஜக ஆட்சி செய்யும் சில மாநிலங்கள், பாஜக அல்லாத சில மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான மாநில வரியையுயும் குறைத்ததன் காரணமாக 10 ரூபாய்க்கு மேல் சில மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்னும் வரியை குறைக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல், டீசல் விலை 40% வரை உயர்வு.. இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்ன தெரியுமா..?!
சந்தோஷப்பட வேண்டாம்
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைத்தால் பெட்ரோல் விலை குறைந்ததாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்க வேண்டாம் என்றும் பெட்ரோல் விலை மீண்டும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இறங்குமுகம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்ந்து கொண்டே இருந்தால் பெட்ரோல் விலை படிப்படியாக உயரும் என்றும் அதுமட்டுமின்றி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தற்போது இறங்குமுகத்தில் இருப்பதை அடுத்து அந்த நிறுவனத்தை கைதூக்கிவிடும் வகையில் பெட்ரோல் டீசல் விலை படிப்படியாக உயர்த்தப்படும் என்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ரூபாய் மதிப்பு
அதேசமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 77 ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே இருப்பதாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே 10 முதல் 15 நாட்கள் கழித்து படிப்படியாக மீண்டும் பெட்ரோல் விலை உயரும் என்பதில் சந்தேகமில்லை.
கடன் அதிகரிப்பு
மேலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததன் காரணமாக மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சரிக்கட்ட 13 மில்லியன் டாலர் கடன் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியாவின் கடன் அதிகரிக்கும் என்பதால் பெட்ரோல், டீசல் மட்டுமன்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
petrol diesel rate hiked again within two weeks?
petrol diesel rate hiked again within two weeks? | மறுபடியும் ஏறப்போகிறதா பெட்ரோல் விலை? விலை இறங்கிடுச்சுன்னு சந்தோஷப்பட வேண்டாம்!|