மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டியை ஆரம்பித்து வைத்த கடற்றொழில் அமைச்சர்

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் சமூக சேவைகள் திணைக்களம் ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட ரீதியிலான மாற்றுத் திறனாளிகளுக்கான மெய்வல்லுநர் போட்டிகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (25) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

வாழ்கையில் தம்மால் எதனையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் வகையிலான இவ்வாறான விளையாட்டுப் போட்டிகளை வரவேற்பதாகவும் இதற்கு என்னுடைய முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்றும் கடற்றொழில் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் கடந்த கால அழிவு யுத்தத்தின் வடுக்களை சுமந்தவர்களாக இருப்பதனால், வாழ்வாதார ரீதியில் வலுப்படுத்த வேண்டியவர்களாக காணப்படுகின்றனர்.
இது தொடர்பாக தன்னுடைய கரிசனையை வெளிப்படுத்தியதுடன் எதிர்காலத்தில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.