ராமேஸ்வரம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை.. வடமாநில கும்பல் கைது !

கடல்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மீனவ பெண்கள் அப்பகுதியில் கிடைக்கும் கடல் பாசியை சேகரித்து அதை விற்பனைசெய்து வருவதை வழக்கமாக செய்து வருகின்றனர்.

அந்த வகையில் வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் கடல்பாசியை சேகரிக்க சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி செய்தாக கூறப்படுகிறது.

rape

பின்னர் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்த அக்கும்பல், இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதிக்கு தூக்கிச்சென்று கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. அத்துடன் கொலையை மறைக்கும் நோக்கில் பெண்ணின் முகத்தை தீவைத்து எரித்ததாக தெரிகிறது.

சந்திரா வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் சந்தேகத்தின் அடிப்படையில் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அப்போது ஆத்திரத்தில் கைது செய்யப்பட்ட ஆறு போரையும் அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த போலீசார், பலத்த பாதுகாப்புடன் உயிரிழந்த சந்திராவின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணையின் முடிவில் தான் 6 வட மாநிலத்தவர்கள் குற்றவாளிகளா அல்லது நிரபராதிகளா என்று தெரியவரும். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

newstm.in


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.