வலுவிழந்த காங்கிரஸ்.. கூட்டணி தான் காரணமா? அழகிரிக்கு கட்சி தலைவர்கள் கேள்வி?

கூட்டணி அரசியலால் தமிழகத்தில் கட்சி நலிவடைந்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியது, மாநிலத்தில் திமுக ஆட்சியில் அக்கட்சிக்கான பிரதிநிதித்துவம் குறைந்ததற்கான புலம்பலாக இருக்கலாம். இருப்பினும், பல கட்சியினர் குறிப்பாக அழகிரியும் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தனது கருத்துக்களைத் தெளிவுபடுத்திய அழகிரி, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் அரசியலில், காங்கிரஸ் முதன்முதலில் கூட்டணி அமைத்தது.

துரதிர்ஷ்டவசமாக, இந்தக் கூட்டணி அரசியலால் கட்சி வளர்ச்சியடையவும் இல்லை, பயன் அடையவும் இல்லை. இது காங்கிரஸுக்கு மட்டுமின்றி மற்ற கட்சிகளுக்கும் பிரச்சனையாக இருக்கும் என நினைக்கிறேன்,” என்றார்.

அவரது அறிக்கை திமுகவுடன் காங்கிரஸின் தற்போதைய கூட்டணியைப் பற்றி குறிப்பிடவில்லை, ஆனால் மாநிலத்தில் அதன் நீண்டகால அரசியலைக் குறிக்கிறது என்று அழகிரி தெளிவாக அடிக்கோடிட்டுக் காட்டினார்.

அழகிரியின் இந்த கருத்து குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியதாவது: 2019 லோக்சபா தேர்தலுக்காக ராகுல் காந்தி தமிழகம் வந்தபோது, ​​அடுத்து வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்று பரிந்துரைத்தார். ஆனால் அந்த யோசனையை அழகிரி மறுத்துவிட்டார். நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்க மாட்டோம், ஆனால் குறைந்த பட்சம் அடிமட்டத்தில் இருப்பை பதிவு செய்து, எங்கள் இளைஞர்களுக்கு கட்சியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்போம்.

மற்றொரு மூத்த தலைவரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமான ஒருவர், அழகிரியின் செயல்பாடுகளை ஒப்பிடுகையில், அவரது அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர்.

2021 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் போட்டியிட்ட 25 இடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பல சீட்டுகள் பாரம்பரிய குடும்பங்கள், மூத்த காங்கிரஸ் தலைவர்களின் மகன்கள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

அழகிரி ஒரு கட்சி சரிவைக் கண்டு கவலைப்பட்டிருந்தால், அந்த இடங்களை தகுதியான வேட்பாளர்களான உண்மையான காங்கிரஸ்காரர்களுக்குக் கொடுத்திருப்பார். எனவே நான் அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, கட்சியின் வீழ்ச்சிக்கு அவர் தவறான காரணங்களைக் கூறுகிறார் என்று கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், நீண்டகால காங்கிரஸ் தலைவருமான அமெரிக்கை நாராயணன், பல ஆண்டுகளாக கட்சித் தலைவர்கள் கட்சிக்காக போராடத் தவறிவிட்டனர் என்று கூறினார்.

திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் தாங்கள் ஆதரித்த அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை கோரவில்லை.

கட்சியின் கண்ணோட்டத்தில், திராவிட தலைவர்களுடன் முக்கியமான கூட்டணிப் பேச்சுக்களைக் கையாண்ட உயர்மட்டத் தலைவர்கள் பெரும்பாலும் கட்சியின் நலன்களுக்குப் பதிலாக தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாத்துள்ளனர். எனவே, மத்தியத் தலைமை, மாநில அரசின் நலனைப் பலியிடுவதாகக் குற்றம் சாட்டினால், மாநிலத் தலைவர்களும் கட்சியின் நலனைத் தியாகம் செய்துள்ளனர். ”

அதே நேரத்தில், சரிந்து போன காங்கிரஸ் இப்போது தனித்துப் போட்டியிட்டால், தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்று அழைக்கப்படுவது போல, காந்தி குடும்பத்தை விமர்சிப்பவர்கள் காங்கிரஸுக்கு எதிரானவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்த துரதிர்ஷ்டவசமான காட்சிகள் கட்சியை பலவீனப்படுத்தியுள்ளன என்று அமெரிக்கை நாராயணன் கூறினார்.

234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டசபையில், காங்கிரஸுக்கு 18 எம்எல்ஏக்களும், திமுகவின் 125 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் கூறுகையில், நாடு எதிர்கொள்ளும் உடனடிப் பிரச்சனைகள் வகுப்புவாதம் மற்றும் பிரிவினைவாத அரசியல், எனவே  காங்கிரஸால் உருவாக்கப்பட்ட கூட்டணிகளை அந்த வெளிச்சத்தில் பார்க்க வேண்டும். “அரசியலில் நுழைவதற்காக நான் எனது வேலையை ராஜினாமா செய்ததற்குக் காரணம், வெவ்வேறு கூட்டாளிகளின் கூட்டணி மூலம் இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பதற்காகத்தான்.

யாரையும் விட்டுவிடாமல், அனைவரையும் ஒன்றிணைத்து நாம் எப்படி ஒன்றுபட்டு சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதுதான் கேள்வி. அது காங்கிரஸின் பங்கு என்று நான் நம்புகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸின் முதன்மைப் பணி, பாஜகவின் முயற்சிகளையும், தீவிர தமிழ்த் தேசியவாதத்தையும் எதிர்ப்பதுதான் என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.