அமெரிக்க பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 18 பேர் மாணவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யுவால்டே பகுதியில் அமைந்துள்ள ராப் தொடக்கப்பள்ளியில் தான் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
சால்வடார் ராமோஸ் (18) என்ற இளைஞன் இந்த சம்பவத்தை நடத்திய நிலையில் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி மற்றும் 66 வயதான பெண் ஆகியோர் உயிருக்கு போராடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர், புகைப்படம் மற்றும் இன்னபிற விபரங்கள் வெளிவந்துள்ளது.
சால்வடார் ராமோஸ் (Pic: Texas Department of Public Safety)
அதன்படி இவா மிரிலீஸ் என்ற ஆசிரியையே கொல்லப்பட்டுள்ளார்.
ஒரு குழந்தைக்கு தாயான இவாவின் கணவர் ஒரு காவல்துறை அதிகாரி ஆவார்.
டெக்சாஸ் துப்பாக்கிச்சூடு தொடர்பாக, உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன், இந்தக் குழந்தைகளுக்காக அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: விஷப்பாம்பு வயிற்றில் அடித்து கொன்ற கிராம மக்கள்! இறப்பதற்கு முன் 50 குட்டிகளை ஈன்ற பாம்பு
வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறையிலிருந்து உரையாற்றிய அவர், ஏதுமறியாத அழகிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், ஒரு போர்க்களத்தைப் போல, தன் நண்பர்கள் கொல்லப்பட்ட காட்சியையும் குழந்தைகள் நேரில் பார்த்துள்ளனர்
இனி காலம் முழுக்க இதே நினைவுகளுடன் இந்தக் குழந்தைகள் வாழ வேண்டியிருக்கும் என்று பேசினார்.
கொல்லப்பட்ட ஆசிரியை இவா மிரிலீஸ் (sky news)
சம்பவம் நடந்த பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழும் நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையில் பள்ளிக்குள் நுழைவதற்கு முன்பு வீட்டில் இருந்த தனது பாட்டியை சால்வடார் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் இது தொடர்பிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
AP
AFP via Getty Images