இந்தியாவின் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனத்தின் மென்பொருள் அமைப்புகள் மீது ரேன்சம்வேர் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு தாக்குதல் முயற்சி நடைபெற்றதால், காலை புறப்பட வேண்டிய சில விமானங்களின் பயணம் தாமதமானது.
தற்போது, பிரச்சனை சரிசெய்யப்பட்டு விமானப்போக்குவரத்து சீராகியுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.