ஸ்ரீதர் வேம்பு செம மாஸ்.. ரூ.20 கோடி முதலீடு செய்த நிறுவனத்தை பார்த்தீர்களா..?!

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதலீடு பெறப் போராடி வரும் நிலையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைக்க முடிவு செய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டின் முன்னணி மென்பொருள் சேவை நிறுவனமான Zoho, ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

ஏற்கனவே ரத்தன் டாடா முதல் ஆனந்த் மஹிந்திரா வரையில் பல முன்னணி தொழிலதிபர்கள், நிறுவனத் தலைவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்து வரும் நிலையில் தற்போது Zoho ஸ்ரீதர் வேம்பு-வும் களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

ஆனந்த் மஹிந்திரா - ஸ்ரீதர் வேம்பு

ஆனந்த் மஹிந்திரா – ஸ்ரீதர் வேம்பு

ஆனந்த் மஹிந்திரா முதலீட்டில் இயங்கி வரும் ரோபோட்டிக்ஸ் ஸ்டார்ட்அப் நிறுவனமான Genrobotics-ல் ஸ்ரீதர் வேம்பு தலைமையில் இயங்கி வரும் Zoho Corporation தனது உபரி பண இருப்பைக் கொண்டு சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

Genrobotics நிறுவனம்

Genrobotics நிறுவனம்

யூனிகார்ன் இந்தியா வென்சர், SEA குரூப் எனப் பல முன்னணி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டைப் பெற்று இயங்கி வரும் Genrobotics நிறுவனம் துப்புரவு பணிகளுக்கான ரோபோக்களைத் தயாரித்து வருகிறது. இன்றைய சமுகத்தில் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது.

20 கோடி ரூபாய் முதலீடு
 

20 கோடி ரூபாய் முதலீடு

ஸ்ரீதர் வேம்பு-வின் Zoho Corporation-னின் 20 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் Genrobotics தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் ரோபோ மூலம் மனிதர்கள் கழிவுகளை அள்ளும் நிலையை மாற்றவும், கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் முடியும் என Zoho மிகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

2017ல் துவக்கம்

2017ல் துவக்கம்

விமல் கோவிந்த், அருண் ஜார்ஜ், ரஷீத் கே மற்றும் நிகில் என்பி ஆகியோரால் 2017 இல் நிறுவப்பட்டது, ஜென்ரோபாட்டிக்ஸின் முதன்மை தயாரிப்புப் பாண்டிகூட் ரோபோ ஆகும், இது உலகின் முதல் ரோபோ ஸ்காவெஞ்சர் என்று கூறப்படுகிறது.

 முக்கியப் பணிகள்

முக்கியப் பணிகள்

குறுகிய மற்றும் இக்கட்டான இடங்களில் இருக்கும் கழிவுநீர் குழாய்கள், சாக்கடைக் கிணறுகள், மழைநீர் குழாய்கள், எண்ணெய் நீர் சாக்கடைகள் (OWS) மற்றும் மழைநீர் சாக்கடைகள் (SWS) போன்றவற்றைச் சுத்தம் செய்ய இந்தப் பாண்டிகூட் ரோபோ உதவுகிறது என ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

ஸ்ரீதர் வேம்பு மாஸ்..

ஸ்ரீதர் வேம்பு மாஸ்..

ஸ்ரீதர் வேம்பு-வின் Zoho Corporation இதற்கு முன்பு vTitan, SignalChip, VoxelGrid, Ultraviolette Automotive எனப் பல நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. ஆனாலும் இந்த நிறுவனம் ரெம்பவே ஸ்பெஷல் என்று தான் சொல்ல வேண்டும் நீங்க என்ன சொல்றீங்க.. மறக்காம கமெண்ட் பண்ணுங்க

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sridhar Vembu’s Zoho Corp invested Rs 20 crore in Genrobotics, a scavenger robotics company

Sridhar Vembu’s Zoho Corp invested Rs 20 crore in Genrobotics, a scavenger robotics company ஸ்ரீதர் வேம்பு செம மாஸ்.. ரூ.20 கோடி முதலீடு செய்த நிறுவனத்தைப் பார்த்தீர்களா..?!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.