ஹலோ சீனியர்ஸ்! – முதுமையில் பாதுகாப்பு, முதலீடு, உடல்நலம்… அறிந்துகொள்ளலாம் வாங்க!

சமீபத்தில் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற ஆடிட்டர் தம்பதி இரட்டைக் கொலையை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. வயதான முதியவர்களைக் குறிவைத்து இந்தக் கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. வயதான தம்பதிகள் தனித்து வாழும் வீடுகளில் அவ்வப்போது இதுபோன்று கொலை, கொள்ளை சம்பவங்கள் பற்றி கேள்விப்பட்டுக் கடந்துவிடுகிறோம்.

Elders

முதுமைப் பருவத்தில் பாதுகாப்பு மட்டுமல்ல நிதியைக் கையாளுதல், சேமிப்பு, முதலீடு மற்றும் உடல்நலம் எனப் பல விஷயங்கள் குறித்த குழப்பமும் அச்சமும் ஏற்படும்.

அதற்கான தீர்வுகளைத் தரும் வகையில் அவள் விகடன் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இணைந்து வழங்கும் ‘ஹலோ சீனியர்ஸ்!’ – உங்கள் பாதுகாப்பு… உங்கள் நலம்… உங்கள் பயணம்… ஆலோசிக்கலாம்.. அலர்ட் ஆகலாம் என்ற நிகழ்ச்சியை வரும் சனிக்கிழமை (மே 28) நடைபெறவுள்ளது. நிகழ்ச்சி ஒத்துழைப்பு The Chennai Homes – Premium Retirement Community.

சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தாம்பரம் மாநகராட்சி மேயர் க. வசந்தகுமாரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

Elders

காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையரும் ஐ.பி.எஸ் அதிகாரியுமான ரவி பங்கேற்று, முதியோர் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை அளிக்கவிருக்கிறார். ‘ஹெல்த் இஸ் வெல்த்’ என்ற தலைப்பில் முதியோர் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணுவது தொடர்பான வழிகாட்டுதலையும் ஆலோசனைகளையும் முதியோர்நல மருத்துவர் டாக்டர் வி.எஸ். நடராஜன் வழங்கவிருக்கிறார்.

‘முதியோரும் முதலீடும்’ என்ற தலைப்பில் நிதி ஆலோசகர் டி.இ.திருவேங்கடம் பங்கேற்றுப் பேசுகிறார். மேலும் ‘வாய்விட்டுச் சிரித்தால்’ என்ற தலைப்பில் திரைப்பட நடிகர் தாமு பங்கேற்றுப் பேசுகிறார். 110, ஜி.எஸ்.டி. சாலை, சாந்திநகர், குரோம்பேட்டை, சென்னை – 44 என்ற முகவரியில் அமைந்துள்ள வசந்தம் திருமண மாளிகையில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. குரோம்பேட்டை பாண்ட்ஸ் சிக்னல் அருகில் வசந்தம் திருமண மாளிகை அமைந்துள்ளது.

ஹலோ சீனியர்ஸ்!

முதியோர் மட்டுமல்லாது முதியோர் நலன் மீது அக்கறையுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு 97909 90404 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.