உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது என்பதும் 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு வைத்திருந்த ஒரே பணக்காரர் எலான் மஸ்க் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் நேற்று ஒரே நாளில் அவருடைய சொத்து மதிப்பு திடீரென சரிந்ததால் 200 பில்லியன் டாலர் கிளப்பில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று எலான் மஸ்க் சொத்து மதிப்பு பங்கு சந்தை வீழ்ச்சி காரணமாக 5.4 சதவீதம் சரிந்தது என்றும், இதன் காரணமாக அவருடைய மொத்த சொத்து மதிப்பு 192.7 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
மோசமான நிலையில் அமெரிக்கா.. எலான் மஸ்க்-ன் டிவீட்..!
![ஒரே நாளில் சரிவு](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653509349_202_elonmusk-1642407599.jpg)
ஒரே நாளில் சரிவு
எலான் மஸ்க்-ன் சொத்து மதிப்பு ஒரே நாளில் 8 பில்லியன் டாலர் சரிந்தாலும் இன்னும் அவர் தான் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக தொடர்கிறார் என்பதும், அவருக்கு அடுத்த இடத்தில் தான் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
![டெஸ்லா தான் காரணம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653509350_152_tesla3-1652271745.jpg)
டெஸ்லா தான் காரணம்
எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் சரிய அவருடைய நிறுவனங்களில் ஒன்றான டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சரிந்தது தான் காரணம் என்று கூறப்படுகிறது. டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்குகள் நேற்று ஒரே நாளில் 7 சதவீதம் சரிந்தது என்றும் நேற்றைய வர்த்தக முடிவின்போது டெஸ்லா பங்கின் விலை 628.16 டாலராக வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
![12 பில்லியன் நஷ்டம்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653509350_536_elonhome-1651066667.jpg)
12 பில்லியன் நஷ்டம்
கடந்த வாரமும் டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு சந்தை 12 பில்லியன் டாலர் குறைந்த நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது, அவரது கார் நிறுவனத்திற்கு பின்னடைவாக உள்ளது. இருப்பினும் இன்னும் அவர் கம்பீரமாக உலகின் முன்னணி பணக்காரராக இருக்கிறார்.
![மீண்டும் 200 பில்லியன் டாலர்](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/05/1653509351_319_elonmusk2-1646488660.jpg)
மீண்டும் 200 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் அவர்களின் டெஸ்லா கார் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தற்போது குறைந்து இருந்தாலும் இன்னும் ஓரிரு நாளில் அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயரும் என்றும் அதன் பின் மீண்டும் அவர் 200 பில்லியன் டாலர் கிளப்பில் இணைவார் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Elon Musk net worth drops below $200 billion but he continous No.1 position
Elon Musk net worth drops below $200 billion but he continous No.1 position200 பில்லியன் கிளப்பில் இருந்து கீழே இறங்கிய எலான் மஸ்க்: ஆனால் நம்பர் ஒன் அவர்தான்!