மோட்டோ E32s ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ E சீரிஸ் வரிசையில் E32s ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இந்த போன் ஐரோப்பிய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போன் இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த போனின் அறிமுகம் அதிவிரைவில் நடக்கும் என டிஜிட்டல் கேட்ஜெட்ஸ் வல்லுனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மோட்டோ E32s சிறப்பு அம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்.
- 6.5 இன்ச் ஹெச்.டி+ டிஸ்ப்ளே.
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி37 புராசஸர்.
- 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் ஆப்ஷன்.
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா.
- 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
- 4ஜி இணைப்பு வசதி, டைப்-சி சார்ஜிங் போர்ட் போன்றவையும் இதில் உள்ளது.
- 5000mAh திறன் கொண்ட பேட்டரி இந்த போனில் உள்ளது.
- இந்தியாவில் இந்த போனின் விலை 12,400 ரூபாய் இருக்கலாம் என தெரிகிறது.