வேதாந்தா நிறுவனம் 20 பில்லியன் டாலர் செமி கண்டக்டர் மற்றும் டிஸ்பிளே ஆலைகளைகளுக்கான இடத்தினை அடுத்த மாதம் இறுதி செய்யும் என தெரிவித்துள்ளது.
இதே அடுத்த ஆண்டுகளில் முதல் சிப் உற்பத்தியினை தொடங்கலாம் என எதிர்பார்க்கிறது என வேதாந்தா குழுமத்தின் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!
ஆயில் டூ மெட்டல் குழுமம் இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஆலைகள் அமைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவித்துள்ளது.
வேதாந்தாவின் திட்டம்.
மொத்தத்தில் வேதாந்தா நிறுவனம் சிப் மற்றும் டிஸ்பிளே உற்பத்திக்கான இரண்டு தனித் தனி யூனிட்களுக்கு 20 பில்லியன் மொத்த முதலீட்டு செலவினத்தைக் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இன்னொரு தைவானை உருவாக்க வேண்டும். அடுத்த மாதத்திற்குள் சிப் யூனிட் தளத்தை அமைக்க வேதாந்தா திட்டமிட்டுள்ளது.
பாக்ஸ்கான் கூட்டணி
இந்தியா முழு செமி கண்டக்டர் சுற்றுச்சூழல் அமைப்பையும் கொண்டு வருவதில், நிறுவனம் கவனம் செலுத்தும் என கூறியுள்ளார். ஃபாக்ஸ்கான் எங்கள் தொழில்நுட்ப பங்குதாரர். இது தொழில் நுட்பத்தினை வழங்குவது முதல் குறைகடத்திகள் தயாரிப்பது வரையில் செயல்பாட்டிற்கான பொறுப்பினை ஃபாக்ஸ்கான் எடுக்கும்.
முதல் கட்ட முதலீடு
இந்த செமிகண்டக்டர் ஆலையில் இந்தியாவின் தனியார் ஈக்விட்டி நிறுவனம் முதலீடு செய்ய விரும்புகிறது. இங்கு நிதி பற்றாக்குறை இல்லை என்றும் அகர்வால் தெரிவித்துள்ளார். வேதாந்தாவில் இந்த திட்டத்தின் மூலம் முதல் கட்டமான 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் என தெரிகிறது.
என்ன செய்கிறது?
இம்மாத தொடக்கத்தில் அனில் அகர்வால், இந்தியாவில் 15 பில்லியன் டாலர் மதிப்பிலான செமிகண்டக்டர்களை இறக்குமதி செய்ய வேண்டும். இது செமிகண்டக்டர்களுக்கான பற்றாக்குறை இருந்து வருகிறது. செமிகண்டக்டர் பற்றாக்குறையால் 100% தொழில் சாலைகளை இயக்க முடியவில்லை, நாங்கள் கண்ணாடி மற்றும் ஆஃப்டிகல் ஃபைபர் உற்பத்தி செய்கிறோம். ஆக நாங்கள் செமிகண்டக்டர் உற்பத்தி செய்வது என்பது இயல்பானது என தெரிவித்துள்ளார்.
சலுகைகள்
இந்திய அரசு உற்பத்தியினை அதிகரிக்க பல்வேறு சலுகைகளை பி எல் ஐ திட்டம் மூலம் ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையில் வேதாந்தாவுக்கும் அந்த சலுகை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Have to create another Taiwan in India; Vedanda plans to set up chip unit site by next month
Vedanta has said it will finalize space for its $ 20 billion semiconductor and display plants next month.